நாமக்கல் மாவட்டம் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூபாய் 30 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமாIAS வழங்கினார்
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமாIAS தலைமையில் நடந்தது இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை கல்வி உதவித்தொகை இலவச வீட்டு மனை பட்டா வங்கி கடன் உதவி குடிசை மாற்று வாரிய வீடு குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 662 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர் இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனுக்களை மறு பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்
