சென்னை கலைவாணர் அரங்கில் செய்தித்துறை அமைச்சரால் தொடங்கப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்பு!!!
By -
2:05 AM
0
இன்று சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள், காட்சி ஊடகங்களில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆகியோர் தமிழ் மொழியினை சிறப்பாக உச்சரிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
