இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு சார்பில் கட்டப்பட்டுள்ள விடுதிகளை திறந்து வைத்த தமிழக முதல்வர்!!!
By -
6:56 AM
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு விடுதி, நிர்வாக அலுவலகக் கட்டடம் மற்றும் தங்கும் விடுதி, உள்விளையாட்டு அரங்கம், செயற்கை இழை தடகள ஓடுதளம் மற்றும் 5 நபர் அணிகளுக்கான செயற்கை இழை ஹாக்கி மைதானம் ஆகியவற்றை திறந்து வைத்து, 9 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்களும், கோபாலபுரத்தில் குத்துச்சண்டை அகாடமியும், தென்காசி மாவட்டம், பட்டக்குறிச்சி கிராமத்தில் மாவட்ட விளையாட்டு வளாகம் ஆகிய விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
