தேனி மாவட்ட : பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தமபாளையம் பேரூராட்சி ஆர்.சி. கீரைமேட்டுதெருவில் நேரடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்களா!!!

sen reporter
By -
0


 உத்தமபாளையம் 6வது வார்டு ஆர்.சி.கீரைமெட்டு தெருவில் பொதுமக்களை செங்கரும்பென சக்கையாய் பிழியும் 6வது வார்டு கவுன்சிலர் மற்றும் உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகத்தால்  பொதுமக்கள் கண்ணீர் வடித்தவாறு உள்ளனர்.6வது வார்டு ஆர்.சி. கீரைமேட்டுதெருவில் பாதையானது சரிஇல்லாமல்  பொதுமக்கள் அடிக்கடி கீழே விழுந்து வருகின்றனர்.மேலும்,ஆர்சி.கீரைமேட்டு தெரு மக்களை படிக்காத பாமரர்கள் தானே எனும் ரீதியில் கவுன்சிலரும்,மற்றும் உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகமும் வார்டு மக்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதாக பொதுமக்கள் புலம்பிய வண்ணம் உள்ளனர்.இப்பகுதியில் வயதானவர்கள் மற்றும் சிறியவர்கள் செல்லும்போது பாதை சரி இல்லாத காரணத்தினால் கீழே விழும் சூழல் நடந்த வண்ணமே காணப்படுகிறது. பாதையை சீரமைத்து தரும்படி 6வது வார்டு கவுன்சிலரிடம் பலமுறை கூறியும் காதில் வாங்கமால் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.ஓட்டு வாங்கும்போது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என ஓட்டுகேட்டு வெற்றி அடைந்தபிறகு தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டாரா என பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதனை தொடர்ந்து  உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கூறியும் பேரூராட்சி நிர்வாகமும் கண்டுகொள்ளாமல் உள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.இப்படி   6வது வார்டு கவுன்சிலரும், உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகமும் ஆர்.சி.கீரைமெட்டு தெரு மக்களை கலங்கடிப்பதால் பொதுமக்கள் ரத்தக் கண்ணீருடன் உள்ளனர்.இப்பகுதியில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். மேலும்,அசம்பாவிதம் ஏற்பட்டு பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டால் 6வது வார்டு கவுன்சிலரும், உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகமும் பொறுப்பேற்பார்களா என பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகின்றனர். பொதுமக்களின் கோரிக்கைககளை கவுன்சிலரும், உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகமும் ஏற்காததற்கு தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விளக்கம் கொடுப்பாரா.உத்தமபாளையம் பேரூராட்சியில் அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு AC ரூமில் அமர்ந்து பாமர ஏழை மக்களின் வயிற்றில் அடித்தால் ஏழை மக்கள் என்ன செய்வார்கள்.இதனை கருதி தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நேரடி பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)