கடலூர் : மாநகராட்சி காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவ சிலையை திறந்து வைத்த தமிழக முதல்வர்!!!
By -
3:21 AM
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன், மாநில திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் திரு. மு. நாகநாதன், சட்டமன்ற உறுப்பினர் மரு. நா. எழிலன், தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப., மற்றும் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கடலூரிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ. அய்யப்பன், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ. தருண் தம்புராஜ், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
