நாமக்கல்: மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி!!!

sen reporter
By -
0


 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ரோப் கார் திட்டம் கொண்டுவரப்படுமா என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றதை தொடர்ந்து நரசிம்மர் கோவில் வளாகத்தில் தலவிருட்சம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார்  ராஜேஷ் குமார் எம் பி, ராமலிங்கம் எம்எல்ஏ, மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நகர அமைப்பு மண்டல திட்டுக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தல விருட்சம் மரக்கன்று நட்டார். இதில் இணை ஆணையர் பரஞ்சோதி, துணை ஆணையர் மேனகா, உதவி ஆணையாளர்கள் இளையராஜா, ரமணி, காந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது 

திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதல்படி  131 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து உள்ளது அதேபோல் மீட்கப்பட்ட சொத்து மதிப்பு ரூபாய் 5.436 கோடி ஆகும் என்றும் இந்த 28 மாத கால ஆட்சியில் 8.006 கோயில்களுக்கு தொல்லியல் துறை பரிந்துரை திருப்பு பணிக்கு அனுப்பி வழங்கி உள்ளது எனவும் மேலும்,வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சாதனையாக இதை கருதுகிறோம் என கூறினார். முன்னாள் அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையதுறை வளாகத்தில் முதலமைச்சர் தலவிருட்சம் மரத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வட்டார மாநில முழுவதும் இருக்கின்ற கோயில்களில் அந்தந்த கோயில்களின் தலை மரங்கள் என ஒரு லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. தமிழக கோவில்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிற அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு எந்த விதமான பணி உத்தரவாதமும் பணப்பயனும் இல்லாமல் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் ஊக்கு தொகையாக அளித்து 15 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர் என்றும் கூறினார்.

ஆண்டுதோறும் 2500 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பாக இரண்டு ஆண்டுகளில் 5000 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது மேலும் 25,000 மேற்பட்ட கோயில்களில் இந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் குடமுழுக்கு திருப்பணிகள் நடக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் புரோக்கர் திட்டம் ஆய்வில் உள்ளது சாத்தியக்கூறுகள் குறித்து இரண்டு முறை அளித்து சாத்தியக்கூறுகள் இல்லை என அறிக்கை தந்து உள்ளனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக வரைபடம் கேட்டு உத்தரவிட்டுள்ளோம் சோழிங்கநல்லூர் ரோக்கார திட்டத்தை கார்த்திகை மாதம் இறுதிக்குள் முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளோம் எனவும் கூறினார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)