தமிழகத்தில் சமீபகாலமாக மது வினால் பல்வேறு பகுதிகளில் உயிரிலப்பு ஏற்பட்டு பலரும் பலியாகிய நிலையில் ...அனைத்து பகுதிகளிளும்..பார் நடத்த அனுமதி இன்றி அரசு மதுபான கடைகளில் மட்டுமே சில மாதம் மது விற்பனையை செய்து வந்தது அரசு..
பிறகு நாட்க்கள் ஆக ஆக ..அரசியல் தலையீடு காரணமாக அரசியல் வாதிகள் பகிரங்கமாக மீண்டும் பொது வெளியில் பார் அனுமதி இல்லாமலே ஒட்டன்சத்திரம் பகுதி முழுவதும் பார் திறந்து சில்லிங் மது விற்பனையை தொடங்கி மது பாட்டில்களை பயமின்றி விற்பனை செய்து வருகின்றனர்...
காலை நேரத்தில் பணிக்கு செல்லும் ஏழை தொழிலாளிகளை குறிவைத்து அதிக விலை வைத்து மது விற்பனை செய்வதால் அதை வாங்கி அருந்தி விட்டு சாலையின் பொது வெளியில் தன்னை அறியாமல் போதையில் விழுந்து கிடப்பது தினந்தோரும் அரங்கேறி வருகிறது ..பாவம் அந்த அப்பாவியின் குடும்பத்தை நினைத்து பாருங்கள்.. மேலும் அவ்வளியே வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளை இக்காட்சிகள் முகம் சுளிக்க வைக்கிறது.
இப்படி சட்டத்துக்கு புறம்பாக சில்லிங் மது விற்பனையை தடுக்க வேண்டிய காவல்துறையே கை கட்டி வேடிக்கை பார்கிறது...
இனிவரும் காலங்களில் ஒட்டன்சத்திரம் பகுதியில் அனைத்து போதை பழக்க வழக்கங்களும் பொதுவெளியில் சர்வ சாதாரணமாக கிடைக்கும் என்பதற்க்கு இது சாட்சி....
எனவே மாவட்ட ஆட்சியர் இந்த சில்லிங் மது விற்பனையை ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யும் நபர்கள் மீது அரசியல் தலையீடு இன்றி விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பாவி ஏழை கூலி வேலை செய்யும் நபர்களை காப்பாற்ற வேண்டுமென ஒட்டன்சத்திரம் பகுதி சமூக ஆர்வலர்கள் மிக அழுத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்....

